சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கம் - கோவையில் இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாட்டம்!

நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை புரிந்த நிலையில் மனசு நிறைந்தது போலவே வயிறு நிறைய வேண்டும் என கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள பிரியாணி கடை ஒன்றில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி, சில்லி சிக்கன் இலவசமாக வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.



கோவை: நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் கோவையில் பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர். சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் - 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி தீர்த்தது.

கோவையில் கல்லூரிகள், பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.



அந்த வகையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் இயங்கும்பிரியாணி கடையில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி சந்திரயான் வெற்றி கொண்டாடப்பட்டது.



இந்த கடையின் உரிமையாளரும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவருமான ஜெ. முகமது ரஃபி, 300க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கினார்.



இது குறித்து பிரியாணி கடை உரிமையாளர் முகமது ரஃபி கூறியதாவது, இந்தியா நாடு இன்று உலக அரங்கில் மகத்தான சாதனை புரிந்திருக்கின்றது. இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விண்கலத்தை தரை இறக்கியிருக்கிறது.

உலகிலேயே முதல் நாடாக இந்தியா பெருமைக்குறிய இந்த சாதனை செய்தது. இந்தியர்களாக இருக்கின்ற அனைவருக்கும் இது உலக அரங்கில் பெருமைப்பட வைத்திருக்கின்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனையை இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரயான்வெற்றி இந்தியர்களின் மன நிறைவினை தந்த நிலையில், வயிறும் நிறைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் நடத்துகின்ற பிரியாணி கடையில், வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடினோம்.

இந்தியாவின் இஸ்ரோ செய்த இந்த உலகம் போற்றும் மகத்தான சாதனையில், தமிழக விஞ்ஞானிகள் பெரும் பொறுப்பில் இருந்தது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நம் நாட்டின் உலக அளவிலான மரியாதை மென்மேலும் ஓங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...