மதக் கலவரத்தை தூண்டுவதற்காகவே பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் செல்வது மதக் கலவரங்களை தூண்டி விடுவதற்கு தான் என அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். நட்பாக பழகி வரும் சமூகத்தை கெடுக்கவே இதனை அண்ணாமலை செய்து வருகிறார் எனவும் அவர் சாடினார்.



கோவை: சந்திராயன் நிலவில் கால் தடத்தை பதித்து விட்டது. ஆனால் மணிப்பூர் வன்முறைக்காக இதுவரை மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. மத பிரச்சனையை தூண்டும் பாஜக அரசை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி கேட்டுகொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



பின்னர் மேடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, கலைஞர் கருணாநிதி, தான் படிக்கும் காலத்தில் இருந்தே சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் என புகழாரம் சூட்டினார். கடலில் கருணாநிதியின் பேனா சிலையை வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து அதற்கான பணிகளை முன்னெடுத்தபோது, தமிழ் துரோகிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என காட்டமாக விமர்சித்தார்.

நீதிமன்றம் சென்று பேனாவை கடலில் வைக்கலாம் என்ற தீர்ப்பை முதல்வர் பெற்று தந்துள்ளதாக அவர் கூறினார். மேலும் சிதம்பரம் கோவிலில் உள்ள நந்தியின் வரலாறு குறித்து குட்டி கதை கூறிய அமைச்சர் பொன்முடி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நந்தனார் வகுப்பைச் சேர்ந்த இறையடியார் சிதம்பரம் கோவிலுக்கு சென்றபோது, அங்கிருந்த உயர் வகுப்பினர் சிலர் தடுத்து நிறுத்தியதால் அங்கிருந்த நந்தி நகர்ந்து நின்றதாக வரலாறு இருப்பதாகவும், இறைவன் நந்தனரை கோயிலுக்குள் அழைக்காமல் விட்டதே தற்போது சமூகநீதி பிரச்சனைகளுக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தபோது அதனை அதிமுகவினர் விமர்சித்ததாகவும், மாநாட்டில் உணவை குப்பையில் வீசியவர்களுக்கு மக்கள் மீது மதிப்பில்லை எனவும் விமர்சித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் செல்வது மதக் கலவரங்களை தூண்டி விடுவதற்கு தான் என என விமர்சித்த அமைச்சர், நட்பாக பழகி வரும் சமூகத்தை கெடுக்கவே இதனை அண்ணாமலை செய்து வருகிறார் என சாடினார்.

சந்திராயன் கூட நிலவில் கால் தடத்தை பதித்து விட்டது. ஆனால் மணிப்பூர் வன்முறைக்காக இதுவரை மோடி அங்கு சென்று பார்க்கவில்லை எனவும், மத பிரச்சனையை தூண்டும் பாஜக அரசை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசுவையில், இஸ்ரோ நிலவில் கால் பதித்திருப்பது வரவேற்கக் கூடியது எனவும், இதில் முக்கிய பங்கு வகித்த வீர முத்துவேல், தன் சொந்த ஊரான விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் சந்திரயான் 3 நிலவில் கால் பதித்தது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றி எனவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றிக்கு முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் எனவும் அமைச்சர் கூறினார். அதோடு விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



முன்னதாக நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான இருக்கைகளை எடுத்து வர சிறுவர்களை திமுகவினர் பயன்படுத்தியது கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...