பாரதியார் கனவு நேற்று நனவாக்கியுள்ளது - சந்திராயன் 3 பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

பாரதியார் கனவு நேற்று நனவாக்கியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



கோவை: நீட் மசோதாவில் ஆளுநர் ரோல் எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் முடிவு எடுக்க வேண்டும். ஆளுநரை திமுகவினர் பேசும் முறை சரியல்ல. ஆளுநர் திமுக சவாலை ஏற்று தனது மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என திமுகவினர் பேசக்கூடாது ஆளுநரை சம்மந்தம் இல்லாமல் வம்பு இழுப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதியார் கனவு நேற்று நனவாக்கியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்த நிலை இருந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா உருவாகியுள்ளது. சந்திராயனில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, அப்துல் கலாம் தமிழ் மொழியில் படித்தவர். ஐஎஸ்ஆர்ஒ விற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது.

நாகப்பட்டினத்திற்கு வர வேண்டிய விண்கல ஏவுதளம், 4 மணி நேரம் தாமதமாகவும், திமுக அமைச்சர் தள்ளாடி தள்ளாடி வந்ததால் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு சென்றது. இரண்டாவது விண்கல ஏவுதளம் குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை திமுக அரசிற்கு உள்ளது.

சந்திராயனில் பணியாற்றிய மூவரும் தேசியத்தை நம்பும் தேசிய தமிழர்கள். தமிழகத்தில் துவங்கிய நடைபயணம் குறித்து கேட்டபோது பொன்முடி, ஈவிகேஎஸ் இளங்கோவன் நடக்க முடியாமல் ஏசி ரூமில் இருந்து அரசியல் செய்கிறார்கள். 23 நாளில் 128 கி.மீ. நடந்துள்ளோம். 234 தொகுதிகளிலும் நடந்த முதல் கட்சியாக பாஜக தான் இருக்கும். அரசியல் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். பாஜக நடைபயணத்தால் அரசியல் புரட்சி நடக்கும். நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிள் 21, குர்ஆன் 7 புத்தகமும் அதிகமாக வந்துள்ளது. எனது பூஜை அறையில் பைபிள், குர்ஆன் உள்ளது. பாஜகவை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பாஜக மீதான பிம்பம் உடைத்து அனைவருக்கும் உழைக்கும் கட்சியாக பாஜக உள்ளது.

இந்த நடைபயணத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் நடந்துள்ளார்கள். அரசியல் மாறிவிட்டது. களம் மாறிவிட்டது. இதை திமுக புரிந்துகொள்ள வேண்டும். நீட் மசோதாவில் ஆளுநர் ரோல் எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் முடிவு எடுக்க வேண்டும். ஆளுநரை திமுகவினர் பேசும் முறை சரியல்ல, ஆளுநர் திமுக சவாலை ஏற்று தனது மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என திமுகவினர் பேசக்கூடாது ஆளுநரை சம்மந்தம் இல்லாமல் வம்பு இழுக்கிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும்.இதுகுறித்து பதில் சொல்ல திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.

காவிரி பிரச்சினைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். இதில் இடியாப்ப சிக்கலை உருவாக்கி முதலமைச்சர் ரசிக்கிறார். எல்லா சமுதாயமும் தனித்திறமையால் மேலே வந்து கொண்டுள்ளது. நாடார் சமுதாயத்தில் இந்து, கிறிஸ்துவர்கள் என பிரச்சனை கொண்டு வந்தது கலைஞர் கருணாநிதி. ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது திமுகவின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. எல்லாருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல்.

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம். அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு முக்கிய மாநாடு. மாநாடு என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...