கோவையில் மாநகர காவல் ஆணையர் தலைமையில்  போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்!

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுபடுத்துவதற்கான கூட்டத்தில் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


கோவை: மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனதலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 145 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து காவல்துறை மூலமாகவும். பல்வேறு துறைகளின் மூலமாகவும் துரித நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, பல்வேறு துறைகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் உள்ள கழிவறைகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு. போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்கவும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் வழங்கவும். உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க காவல்துறையும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராக உள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து தயக்கமின்றி உண்மையான தகவல்களை காவல்துறைக்கு ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...