உள்நாட்டு குதிரைகளை பாதுகாக்க விழிப்புணர்வு - கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை குதிரை பயணம் செய்து 5 பேர் சாதனை

ஈரோட்டைச் சேர்ந்த 2 சிறார்கள் உட்பட 5 பேர் கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை குதிரையில் பயணித்து இந்தியா புத்தகத்தில் இடம்பிடித்தனர். அவர்களுக்கு கோவையில் இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



கோவை: குதிரைப்பந்தய மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை குதிரை சவாரி செய்த ஐந்து பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குதிரை ஆர்வலர்கள், பந்தய வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி என்ற அமைப்பினர் உள்நாட்டு குதிரைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தால் மற்றும் அங்கீகாரம் பெற்றுத்தருதல் ஆகிய பணிகளை கடந்த 2019ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே வருங்கால தலைமுறையினர் உள்நாட்டு குதிரை இனங்களை பாதுகாக்கவும், வளர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி மற்றும் ஈரோடு நிலா குதிரை பயிற்சி பள்ளி இணைந்து குதிரை சவாரியை நடத்தினர்.

ஈரோட்டைச் சேர்ந்த சுபத்ரா என்ற 12 வயது சிறுமி, மனவ் சுப்ரமணியன் என்ற 11 வயது சிறுவன், உட்பட பிரியதர்ஷினி ரங்கநாதன் (32), கவுதமன் மேவாணி வெற்றி கண்ணன் (33) மற்றும் சுவாதி விக்னேஷ்வரி (32) ஆகிய ஐந்து பேர் இந்த குதிரை சவாரியில் கலந்து கொண்டனர்.



கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கன்னியாகுமரியில் இந்த குதிரை சவாரி பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து 10 நாள் பயணத்தில் மொத்தம் 497 கிலோ மீட்டர் தொலைவை குதிரை சவாரியிலேயே கடந்து கடந்த 8ம் தேதி ஐந்து பேரும் அந்தியூர் குதிரை சந்தையை வந்தடைந்தனர்.



இவர்களது சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் அங்கீகரித்து சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.



இந்த சூழலில் குதிரை சவாரி பயணம் மூலமாக சாதனையை மேற்கொண்ட 5 பேருக்கும் இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பில் கோவையில் உள்ள குதிரைப்பந்தய மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குதிரை ஆர்வலர்கள், பந்தய வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...