கோவையில் அரசு விழாவின் பாதுகாப்பு பணியில் தனியார் பவுன்சர்களை ஈடுபடுத்தியதால் சர்ச்சை!

கோவை கொடிசியா வளாகத்தில் இன்றைய தினம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்ட தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சியில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்களை ஈடுபடுத்தப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொடிசியா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில்தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு தமிழக காவல் துறையை நிறுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்கள்நிறுத்தப்பட்டுஇருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு சிறு ,குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

இதனால் பதிவு செய்து அனுமதி பெற்ற நபர்கள்கழுத்தில் டேக் அணிந்து இருந்தால் மட்டுமே விழா அரங்கு மற்றும் கண்காட்சி அரங்குகளில் அனுமதிக்கப்பட்டனர். அரங்கம் மற்றும் கண்காட்சி வாயில்களில் பாதுகாப்பு பணிகளுக்காக தனியார் நிறுவனங்களை சேர்ந்த பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.



கருப்பு உடையில் நின்றிருந்த பவுன்சர்கள் டேக் அணியாமல் வந்த நபர்களை அனுமதிக்க மறுத்து வெளியேற்றினர். மேலும், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள்கண்டிப்பாக அடையாள அட்டையை காட்டிவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் பவுன்சர்கள் நிர்பந்தம் செய்தனர். இதனால் நிகழ்ச்சிக்கு தொழில் கனவுகளுடன் வந்தவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும், ஒரு சிலர் கருப்பு உடை அணிந்த பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாவில், தமிழக காவல்துறையினரை பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்களை ஈடுபடுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...