மினி ஸ்டேடியம் தேர்வு பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேட்டி

கோவையில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுக்கபட்டு வருவதாகவும், தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.



கோவை: கால்பந்தை உதைத்து தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

கோவை செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மேம்படுத்தி தர வேண்டி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனமான வாக்-கரோ நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் இணைந்து சுமார் 6.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு புதிதாக கால்பந்து அகடாமி அமைக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.



பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, செட்டிப்பாளையம் பேரூராட்சி தலைவர் இரங்கசாமி, வாக்-கரோ செயல் அலுவலர் நவ்சாத் உள்ளிடோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



முன்னதாக மாணவர்களுக்கு கால்பந்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கால்பந்தை உதைத்து மைதானத்தை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்,



தனியார் பங்களிப்புடன் இந்த மைதானம் சுமார் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்து வைத்துள்ளதாகவும், இதைபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் இதைபோல் தனியார் பங்களிப்புடன் பள்ளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகள் கணக்கு எடுக்கப்பட்டு கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மினி ஸ்டேடியம் அமைக்கபட உள்ளதாக கூறினார்.

தற்போது பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதைபோல் தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் பணி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறியதுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...