பணியிட மாறுதல் வேண்டி 6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து மனு வழங்கிய ஓட்டுநர்!

சுங்கம் போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் பணியிட மாறுதல் கோரி கண்ணன் என்ற ஓட்டுனர் தனது 6 மாத கைக்குழந்தையுடன் காலில் விழுந்து மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: சுங்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சரிடம், பணியிட மாறுதல் கோரி ஓட்டுனர் ஒருவர் 6 மாத கைக்குழந்தையுடன் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை சுங்கம் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்/நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.



மேலும், பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி மற்றும் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



அப்போது மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.



இதுகுறித்து கண்ணன் கூறியதாவது, எனது சொந்த ஊர் தேனி என்றும் தனக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார்.

எனவே இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய் தந்தையார் தான் பார்த்து கொள்கின்றனர். எனது பெற்றோர்களுக்கும் வயது காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது.

எனவே தனக்கு சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இது குறித்து பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்தேன்.

மேலும் அமைச்சர், தனது பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இவ்வாறு கண்ணன் கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...