வாளையார் அணையில் மூழ்கி தமிழக கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சோகம்!

கோவை நவக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூவர் தமிழக - கேரள எல்லையான வாளையார் அணையில் ஆழமான பகுதியில் குளித்த போது சேற்றில் சிக்கியதில், ஒரு மாணவரை பொதுமக்கள் மீட்ட நிலையில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: கோவை - கேரளா எல்லை வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், நவக்கரை பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி (தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி) செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் வங்கி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 8 பேர், பொழுதை கழிப்பதற்காக தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் அணைக்கு சென்றுள்ளனர். அப்போது உற்சாக மிகுதியில் 3 மாணவர்கள் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளனர்.

அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக வாளையார் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

அதற்குள் அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் விஷ்ணுகுமார் (18) என்ற மாணவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த கேரள போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்டுப் படை வீரர்கள் ஆக்ஸிஜன் உருளைகளை மாட்டிக்கொண்டு உள்ளே இறந்த உடல்களை தேடினர்.

இந்நிலையில், சுமார் 5 மணி நேர தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு பொள்ளாச்சியை சேர்ந்த திருப்பதி (18) மற்றும் நாமக்கலை சேர்ந்த சண்முகம் (18) ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அணையின் ஆழமான பகுதியில் நீந்திய மாணவர்கள் சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள கேரள போலீசார், அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி தண்ணீரில் இறங்குபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...