சூலூர் அருகே பாரதியார் பல்கலை பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்!

சூலூர் அருகே செயல்பட்டு வரும் மஹி கலாசேத்ரா என்ற பரதநாட்டிய பள்ளி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய படிப்புக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கியதாக மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சூலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பரதநாட்டிய பள்ளி, பாரதியார் பல்கலையின் பெயரை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.



கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மஹி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாண்டுகள் டிப்ளமோ, இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதுகலை பரதநாட்டிய பட்டய படிப்புகள் பாரதியார் பல்கலை அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதாக நாட்டிய பள்ளி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.



இதனை நம்பி பலர் இந்த பரதநாட்டிய பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் கோவை கணியூரை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகளும் இங்கு நாட்டியத்தில் டிப்ளமோ முடித்த நிலையில் அரங்கேற்றம் செய்ய நாட்டிய பள்ளி நிர்வாகம் 3 லட்ச ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுகிறது.



இந்த நிலையில் இன்று மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நாட்டிய பள்ளியை முற்றுகையிட்டு, திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மாணவியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் மாணவியின் தந்தை சக்திவேல் பேசியதாவது,



பரதநாட்டியத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக எனது மகளை இந்த பள்ளியில் சேர்த்தேன்‌. பட்டய படிப்பு என்ற பெயரில் 3 செமஸ்டர் தேர்வுகள் நடத்தி பாரதியார் பல்கலைக்கழக பெயருடன் சான்றிதழ்கள் கொடுத்திருக்கின்றனர்‌.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகத்தை அணுகி கேட்டபோது, 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற பட்டய படிப்புகளுக்கு பாரதியார் பல்கலை சார்பில் அனுமதி அளிக்கவில்லை.

இதுகுறித்து நாட்டிய பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் எந்த விதம் முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. அரங்கேற்றத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போதும் அதை கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே எனது மகளுக்கு நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். இதுகுறித்து போலீசிலும் புகார் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...