பன்னிமடை அருகே மின்வேலிகளை உடைத்து தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்!

கோவை பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஆனந்தகுமார் என்பவரது தோட்டத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை மின் வேலிகளை உடைத்து 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பன்னிமடை அருகே மின்வேலிகளை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வரப்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஆனந்தகுமார் என்பவரது தோட்டத்தில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.



அந்த யானை தோட்டத்தின் மின் வேலிகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.



இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...