கோவை குடிமக்களை கவுரவப்படுத்தும் விதமாக "ஐகன்ஸ் ஆப் கோயம்புத்தூர் 2017" விருது வழங்கும் விழா


ரத்தினம் பொறியியல் கல்லூரியில் இன்று ஐகன்ஸ் ஆப் கோயம்புத்தூர் 2017" என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாநகரத்திற்கு பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இன்று 4-வது ஆண்டாக ரத்தினம் கல்விக் குழுமங்கள் இவ்விழாவை நடத்தியது. 



இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முனைவர் பிங்கி ஆனந்த், ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் துணைத் தலைவர் கிருஷ்ணச் சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில், கோவை மிகச்சிறந்த தொழில் நகரமாகும் என கூறினார். கோவையின் மக்கள் அவர்களுடைய சமூக அக்கறைக்கு பெயர்பெற்றவர்கள். கோவையில் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது இதற்கு எடுத்துக்காட்டாகும். 



இதுபோன்ற தொடர் முயற்சிகள் இந்நகரத்தை மென்மேலும் முன்னேற்றும். ரத்தினம் கல்விக் குழுமங்களின் மூலமாகவும் நாங்கள் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். புதிதாக தொழில் துவங்குவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரத்தினம் கல்விக் குழுமம் செயல்படுவதால் புதிதாக பல்வேறு நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. இதுவே இந்நகரத்தின் சாத்தியக்கூறுகள் ஆகும்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் பல தொண்டு நிறுவனங்களால் காப்பாற்றப்பட்டு தற்போது எங்கள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டுள்ளது. அம்மரங்கள் தற்போது செழித்து வளர்ந்து வருகின்றன" என்றார். 



இந்த விழாவிற்கு ஊடக பங்களிப்பாளர்களாக ரேடியோ சிட்டி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை செயல்பட்டன.



இதில் விருது பெற்ற மாயாஜால கலைஞர் வசந்த் தன்னுடைய மாயாஜால கலைகளின் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மகிழ்வித்தார். அவர், 10 ரூபாய் நோட்டை 2000 ரூபாயாக மாற்றியது அனைத்து பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதில் பங்கேற்ற சுகுனா குழுமங்களின் தலைவர் சௌந்தரராஜன் பேசுகையில், நானும் எனது சகோதரரும் இணைந்து இந்நிறுவனத்தை ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கினோம். இன்று வருடத்திற்கு 6 ஆயிரம் கோடி ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு, விடாமுயற்சி, மற்றும் ஒழுக்கம் ஆகியவையே மிகச்சிறந்த காரணிகளாகும். தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழிலில் வளர்ச்சி கண்ட பிறகு இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். கோவையில் தொழில் துவங்கிய எங்களது பயணம் இன்று உலகளவில் 9-வது பெரிய கோழி வளர்ப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதனை எண்ணி நாங்கள் பெருமைபடுகிறோம்" என்று கூறினார்.











இவ்விழாவில் பத்மஸ்ரீ விருதுபெற்ற ஏ.முருகானந்தன், சுகுனா நிறுவனங்களின் தலைவர் பி.சௌந்தரராஜன், ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் எஸ்.கந்தசெல்வன், காதுகேளாதோர் தலைவர்கள் அமைப்பின் இயக்குநர் கே.முரளி, துருவங்கள் 16 திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக போராடும் தஸ்லிமா நஷ்ரின், ட்ரக் டேக்சி நிறுவனத்தின் இயக்குநர் யுவராஜ், விஜிஎம் கேஸ்ட்ரோ கேர் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் வி.ஜி.மோகன் பிசராத், தினமலர் பத்திரிகையின் தேசிய விருது பெற்ற செய்தியாளர் சேவியர் செல்வக்குமார், மாயாஜால கலைஞர் எஸ்.ஏ.சி.வசந்த், விளையாட்டு வீரர் என்.விவேகானந்தர், எழுத்தாளர் ஆட்டோ சந்திரக்குமார், சிம்பிளிசிட்டி செயலி நிறுவனர் டி.ஆண்ட்ரூ சாம் ஆகியோருக்கு ஐகன்ஸ் ஆப் கோயம்புத்தூர் 2017 விருது வழங்கப்பட்டது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...