மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை - பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி கூட்டத்தில் மேகதாது அணை குறித்து தமிழக முதல்வர் பேசாதது அவரது சுயநலத்தை காட்டுகிறது என பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கர்நாடகாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் மேகதாது அணை குறித்து தமிழக முதலமைச்சர் பேசாதது அவரது சுயநலத்தை வெளிப்படுத்துவதாக பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சியின் தலைவர்கள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.



இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழக முதலமைச்சர் பேசாதத்திற்கு கண்டனங்களை தெரிவித்து கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநகர மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,



மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் அமைதியாக உள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் இதை பற்றி பேசாதத்திற்கு கடுமையான கண்டனங்களை பாஜக விவசாய அணி தெரிவிக்கிறது.

கர்நாடக அரசுடன் நட்பு பாராட்டி பேசி கொண்டிருக்கிறார். தமிழகத்தை வஞ்சித்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர். தமிழகத்திற்கு திரும்பி வரும் போது தண்ணீருக்கான உரிமை பெற்று வருவார் என காத்திருக்கிறோம்.

ஆனால் அங்கு சமூக நீதிக்காக பேசுவார், தமிழக மக்களுக்காக பேச மாட்டார் என தெரிகிறது. காவிரி தண்ணீரை பற்றி பேசாதது உண்மையான முதலமைச்சரின் சுய ரூபம் பற்றி தெரிகிறது.

ஆனைமலை நல்லாறு, முல்லை பெரியாறு, காவிரி தொடர்பான பிரச்சனை குறித்து பாஜக மாநில தலைவர் நடைபயணத்தில் எதிரொலிக்கும். தமிழக முதலமைச்சர் கட்சி குடும்ப நலனுக்காக கூட்டணியில் உள்ளவர்களை பேசுவதில்லை,

கர்நாடகாவில் காவிரி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சி கைவிட வேண்டும், கைவிட்டால் தான் நான் கர்நாடகா வருவேன் என தமிழக முதலமைச்சர் உறுதி அளித்திருந்தால், அதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டிருக்கும். ஆனால் சுயநலத்திற்காக தமிழக முதல்வர் இதனை செய்யவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...