திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட பூ மார்க்கெட் வசதியாக இல்லை - வியாபாரிகள் குற்றச்சாட்டு!

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பூ மார்க்கெட் வசதியாக இல்லை என குற்றம்சாட்டியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே கடை வைத்துள்ள இடத்திலேயே மார்க்கெட்டை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பூ மார்க்கெட் வசதியாக இல்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் பழைய மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுவதற்காக இடிக்கப்பட்ட நிலையில் அங்கு செயல்பட்டு வந்த கடைகள் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.



இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே இருந்த கடையின் அளவைவிட குறைவான இட வசதியுடன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்களின் கூட்டத்திற்கு ஏற்றவாறு புதிய பூ மார்க்கெட் இல்லாத நிலையில் அங்கே கடைகள் அமைக்கும் பட்சத்தில் ஏராளமான இடையூறுகள் ஏற்படும் என்பதால் தாங்கள் தற்போது செயல்படும் இடத்திலேயே பூ மார்க்கெட் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில்,



கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட பூ மார்க்கெட் வியாபாரிகள் கடை அமைக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லாத நிலை உள்ளது. தற்போதுள்ள வாடகையை விட பல மடங்கு அதிகமாக ஒப்பந்ததாரர் வாடகை கேட்கின்றனர்.

பூ மார்க்கெட் இடிக்கப்படும்போது அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் இரு புறங்களிலும் மார்க்கெட் வைத்து கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பூ மார்க்கெட் கடைகளை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்து தாங்கள் கடை அமைத்துள்ள இடத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் மாநகராட்சி மாவட்ட கூட்டத்திலேயே மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மாநகராட்சியின் இருபுறங்களிலும் பூ மார்க்கெட் செயல்பட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தங்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டு வருகிறார்.

அதனை சட்டரீதியில் நாங்கள் அணுக உள்ளோம். அதுவரையில் தாங்கள் தற்போது உள்ள இடத்திலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது, நாங்கள் தற்போது கடை அமைந்துள்ள காட்டன் மார்க்கெட் வளாகம் வியாபாரிகளுக்கும் வந்து செல்லும் பொது மக்களுக்கும் இடவசதியாக உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்திற்கு செல்லும் பட்சத்தில் பொதுமக்கள் வந்து செல்ல நெருக்கடி ஏற்படும். மேலும் அங்கு கட்டப்பட்டு இருக்கும் கடைகள் மிகவும் நெருக்கமாக காற்று வசதி கூட இல்லாத நிலையில் கட்டப்பட்டிருப்பதால் பூக்கள் இருப்பு வைத்து விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...