பாஜக கண்டுகொள்ளவில்லை..! - பேரூராட்சித் தலைவர் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் 5,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தந்த தங்களை பாஜக கண்டுகொள்ளவில்லை எனக்கூறி தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் உட்பட சுமார் 5000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவராக இருப்பவர் கண்ணம்மாள். கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் ருத்ராவதி பாஜவுக்கு ருத்ராவதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் வராததற்கு கண்டனம் தெரிவித்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் கூறியதாவது, எனது தலைமையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 5,000க்கும் அதிகப்படியான வாக்குகளை பாஜகவுக்கு பெற்று கொடுத்துள்ளோம்.

இந்தப் பேரூராட்சியில் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், கட்சித் தலைமை இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை.



அதனால், ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் மற்றும் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பாஜகவின் முதலாவது பேரூராட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள 4000க்கும் மேற்பட்டோர் வேறு கட்சியில் இணைய உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...