துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் திடீர் தீ விபத்து!

கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறை மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையம் அருகில் உள்ள சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் இன்று வாரச்சந்தை தொடங்க இருந்த நிலையில் அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செவர்லட் காரின் முன்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.



தீ மலமலவென எரியவே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.



இதையடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வந்த 5 தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் அங்கிருந்த குப்பைகளுக்கு யாராவது தீ வைத்து அது காரில் பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...