பீளமேடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்துக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. மேம்பாலப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பீளமேடு அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும், கருப்புக் கொடி கட்டுவது, உண்ணாவிரதம், அறப்போராட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டும் தற்போது வரை அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைப் போன்றே உள்ளது.

மேலும், பீளமேடு ரயில் பாதைக்கு முன்புறத்தில் எஸ்ஏஐஎல் என்னும் நிறுவனம் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகளங்கள் தற்போதுள்ள சர்வீஸ் சாலையில் வந்து செல்வதால் சாலை எழிதில் பழுதடைவதுடன் பொதுமக்களுக்கும் பெருமளவில் இடையூறாக உள்ளது.

எனவே, இந்த எஸ்ஏஐஎல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். மேலும், உடனடியாக பீளமேடு மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும்' என இன்று அதிமுக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, பீளமேடு கன்சியூமர் வாய்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...