யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

உலக யோகா தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய வானதி சீனிவாசன், கோவையில் உள்ள பூங்காக்களில் யோகா செய்வதற்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் யோகா பயிற்சிகளை கட்டாயமாக்க வேண்டும் எனவும் கூறினார்.



கோவை: பள்ளிகளில் யோகா பயிற்சிகளை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக பாஜகவினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 



அதன்படி கோவையில் உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது, 



பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மேலும் உலக நாடுகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருக்கிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காக்களில் யோகா செய்வதற்கான தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்.

இது மதம் சம்பந்தமான விஷயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது. யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழிதவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். தினமும் 30 நிமிடம் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகச்சை நடந்து பூரண குணமாகி வர வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் அதை தான் நினைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...