பல்லடம் நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழல் - 7 திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் போர்க்கொடி!

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில் 7 திமுகவினர் உட்பட 10 பேர் தங்களது வார்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் புறக்கணிப்பதாகவும், நகராட்சியில் டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் கூறி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக பல்லடம் நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருப்பூர்: பல்லடம் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நகராட்சி தலைவர் கவிதாமணி என்பவர் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.



இந்நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையரிடம், திமுக உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 10 கவுன்சிலர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.



அதில், தங்களது வார்டுகளுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை கட்டமைப்புகளும் செய்யாமல், மக்களிடம் தங்களை மிகுந்த அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கமிஷன் காரணமாக டெண்டர் மாற்றம் செய்ய கவுன்சிலர்களிடம் கவனத்தை மாற்றி கையெழுத்து பெற்றதாகவும் இதனால் கவுன்சிலர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனால் ஊழல் முறைகேடு நடப்பதாக திமுக கவுன்சிலர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மாதாந்திர சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டங்கள் என நகர்மன்ற கூட்டத்தை பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் இன்றி ரகசியமாக நடந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் 7 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 பாஜக கவுன்சிலர்கள் 1 காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 18 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...