துடியலூரில் கஞ்சா விற்பனை - கேரள மாநில இளைஞர் கைது!

கோவை துடியலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில் நேற்று துடியலூர் சுற்று வட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் துடியலூர் சரவணம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சஞ்சய்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர், விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது தொண்டமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...