கோத்தகிரி மலை பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை!

கோத்தகிரி அடுத்த தட்டபள்ளம் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று, சாலையில் சென்ற வாகனங்களுக்கு வழி விடாமல் உலா வந்ததால் சுமார் 2 மணி நேரமாக அதே இடத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



நீலகிரி: கோத்தகிரி அருகே தட்ட பள்ளம் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

மலைப் பகுதிகளில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் யானை கூட்டங்கள் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலை பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகல் நேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தட்டப்பள்ளம் மலைப்பாதையில் சுற்றி திரிந்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே அங்கும் இங்குமாக உலா வந்து காட்டு யானை வாகனங்கள் செல்ல வழி விடாமல் நீண்ட நேரம் சாலையிலேயே நின்றது. 

இதன் காரணமாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

ஒற்றை காட்டு யானை நீண்ட நேரம் சுற்றி திரிந்த தால் வாகன ஓட்டிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வாகனத்தி லேயே 2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

எனவே தொடர்ந்து தட்டப்பள்ளம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...