100 நாள் வேலை திட்டத்தில் ரூ.49 லட்சம் மோசடி - காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்கு!

காரமடை ஒன்றியம் மருதூர் பஞ்சாயத்து தலைவரான பூர்ணிமா என்பவர், நூறு நாள் வேலை திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வேலை அட்டை வழங்கி ரூ.49 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.49 லட்சம் மோசடி செய்ததாக காரமடை ஒன்றியம் மருதூர் பஞ்சாயத்து தலைவர் பூர்ணிமா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பூர்ணிமா (40). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதனை பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியதாக கூறப்படுகிறது. மொத்தமாக இவர் வழங்கிய 1,878 வேலை அட்டைகளில் 319 அட்டை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவர்களில் பலர் தனியார் நிறுவன ஊழியர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் அட்டை பெற்றுள்ளனர். 40 ஆண்டுக்கு முன் இறந்தவர் பெயரிலும் அட்டை தரப்பட்டுள்ளது. 

தகுதியற்றவர்களுக்கு அட்டை வழங்கி அரசு பணம் நூதனமாக கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி மூலம் அரசுக்கு பணம் 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மோசடிகள் குறித்து தெரியவந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் மோசடி நடந்திருப்பதும் அதன் மூலம் ஊராட்சி தலைவர் பூர்ணிமா, பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார், பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...