பேருந்துகளில் டிக்கெட் பெற க்யூ.ஆர்.கோடு வசதி - கோவையில் அறிமுகம்!

பேருந்துகளில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு க்யூ.ஆர்.கோடு (QR CODE) மூலம் பணம் செலுத்தும் வசதி, தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் உள்ள தனியார் பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழகத்தில் முதல்முறையாக பேருந்துகளில் டிக்கெட்டுகளை பெற க்யூ.ஆர் கோடு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.



தற்போது பொதுமக்கள் தங்கள் பேருந்துகளில் பயணிகளை வரவழைக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில் க்யூ.ஆர் கோடு அமைத்துள்ளனர். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 



அவ்வப்பொழுது பேருந்தில் பொதுமக்கள் மற்றும் நடத்துனர் இடையே சில்லறை பிரச்சினை அதிகமாக வருகிறது எனவும் இதனை தடுக்க பேருந்து உரிமையாளர்கள் இந்த க்யூ.ஆர் ("QR CODE") கோடு வசதியை பேருந்தில் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 



மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த "க்யூ.ஆர் கோடு" மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிக் கொள்ளலாம் என்ற வசதி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என தனியார் பேருந்து நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...