உதகையில் ஒரு மாதமாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை - கண்டுகொள்ளாத நகராட்சி!

உதகை ரயில் நிலையம் அருகேயுள்ள சாலையில் பாதாள சாக்கடை சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திறந்து கிடக்கும் நிலையில், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், நகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: உதகை ரயில் நிலையம் அருகே சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை உடனடியாக மூடி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உதகை ரயில் நிலையம் அருகேயுள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது. 

தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஆகியவை விபத்திற்குள்ளானது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது. 

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள். 

எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...