‘கோவை கார் குண்டு வெடிப்பின் நோக்கம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பது தான்’ - என்.ஐ.ஏ தகவல்

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவமானது, அரசுக்கு எதிராக போர் தொடுக்கும் நோக்கத்துடனே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் நோக்கம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பது தான் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. 

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.



இதில் ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளரான ஜமேசா முபீன் (28) என்பவர் பலியானார். 

விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதும், இதற்கு ஜமேசா முபீன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.



இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் மீது ஏற்கனவே பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

முகமது அசாருதீன், உமர் பாரூக், ஷேக் இதாயத்துல்லா சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து ஜமேஷா முபீன் கோவையில் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது வழக்கை விசாரித்த என். ஐ.ஏ. தனிப்படையினருக்கு தெரியவந்தது. 

தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூல வீடியோ மூலம் இது தெரியவந்தது. பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது, 

அசாருதீன், அப்சர் ஆகியோர் ஜமேஷா முபீன் வெடி பொருட்களை கொள்முதல் செய்யவும், கலக்கவும் உதவி செய்து உள்ளனர். முகமது தல்கா கார் கொடுத்து உதவி செய்தார். பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் கியாஸ் சிலிண்டரை காரில் ஏற்ற உதவி செய்தனர். 

இந்த சதி திட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீட்டப்பட்டது. இந்த சதி திட்டத்தில் நீலகிரி குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்கை தலைவனாக தேர்வு செய்துள்ளனர். அவன் தலைவனாக இருந்து மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார். 

முகமது தவுபீக்கிடம் ஜமேஷா முபீன் குண்டு தயார் செய்வதற்கான வரைபடங்கள், கையால் எழுதப்பட்ட விவரங்கள் கொண்ட நோட்டு புத்தகங்கள், பயங்கரவாத சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். 

இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உமர் பாரூக்கும், ஜமேஷா முபீனும் நிதி வசூலித்துள்ளனர். சனோபர் அலியும் நிதி உதவி அளித்துள்ளார். பெரோஸ்கான் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்தார். 

மேலும் இவர்கள் அரசின் பொது நிர்வாகம், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே இந்த சதி திட்டத்தின் நோக்கம் என கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...