நடப்பாண்டில் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள்‌ நட காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ இலக்கு!

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு தமிழகம்‌ முழுவதும்‌ 1.1 கோடி மரங்களை நடவு செய்ய ஈஷா யோகா மையத்தின், காவேரி கூக்குரல் இயக்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடவு செய்யும் பணிகளை துவங்கவும் முடிவு.



கோவை: ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பாண்டில் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள்‌ நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல்‌ மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும்‌ ஈஷா, காவேரி கூக்குரல்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தமிழக, கர்நாடக மாநிலத்தில்‌ காவிரி வடிநில பகுதிகளில்‌ உள்ள விவசாய நிலங்களில்‌, 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும்‌ செயலை செய்து வருகிறது.

அதில்‌ தமிழகத்திற்கான இந்த ஆண்டின்‌ இலக்கு 1.1 கோடி மரங்கள்‌ நடுவது. அதில்‌ தற்போது நடவுக்காலம்‌ துவங்கியுள்ளதால்‌, மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை ஈஷாவின் காவேரி கூக்குரல்‌ அமைப்பு மேற்கொண்டு வருகிறது.



அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, கடலார்‌, அரியலூர்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, கோவை, திருப்பூர்‌, மதுரை, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டங்கள்‌ மற்றும்‌ பாண்டிச்சேரியில்‌ ஜூன்‌ 4, 5 ஆகிய தேதிகளில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ விழாக்கள்‌ நடத்தப்பட உள்ளன.

இதன்மூலம்‌, சுமார்‌ 140 விவசாயிகளின்‌ நிலங்களில்‌ 1.6 லட்சம்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ நட உள்ளனர்‌. குறிப்பாக, தேக்கு, செம்மரம்‌, சந்தனம்‌, வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட்‌ போன்ற பண மதிப்புமிக்க டிம்பர்‌ மரங்களை விவசாயிகள்‌ தங்களின்‌ பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனர்‌. 

இதுதவிர சைக்கிள்‌ பயணம்‌, மாரத்தான்‌, விழிப்புணர்வு வாசகங்கள்‌ ஏந்தி ஊர்வலங்கள்‌ என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பல்வேறு நிகழ்ச்சிகளும்‌ நடைபெறவுள்ளது.

மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில்‌ தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும்‌ என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல்‌ இயக்க தன்னார்வலர்கள்‌ விவசாயிகளின்‌ நிலங்களுக்கே நேரில்‌ சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்‌. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின்‌ பெரும்பாலான மாவட்டங்களில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, மேயர்‌, தொழிலதிபர்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, மாணவர்கள்‌, பொதுமக்கள்‌ என சமூக அக்கறையுள்ள பலரும்‌ இந்நிகழ்ச்சிகளில்‌ தன்னார்வத்தோடு பங்கெடுக்கின்றனர்‌.

இதற்கு முன்பு வேளாண்‌ விஞ்ஞானி நம்மாழ்வார்‌, நெல்‌ ஜெயராமன்‌, மரம்‌ தங்கசாமி ஆகியோரின்‌ நினைவு மற்றும்‌ பிறந்த நாட்களில்‌ இதேபோல்‌, லட்சக்கணக்கில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ முன்னெடுத்தது. இவர்கள்‌ மூவரும்‌ ஈஷாவின்‌ பல்வேறு சுற்றுச்சூழல்‌ பணிகளில்‌ ஆரம்பம்‌ முதல்‌ உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவேரி கூக்குரல்‌ இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும்‌, அதை சார்ந்துள்ள விவசாயிகளின்‌ பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்‌ சத்குரு அவர்களால்‌ 2019-ம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின்‌ மூலம்‌ இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள்‌ தங்கள்‌ நிலங்களில்‌ நடவு செய்துள்ளனர்‌.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...