சூலூரில் நான் கடவுள் பட பாணியில் இறந்தவர் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார் - பரபரப்பு!

சூலூர் அடுத்த குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது நண்பரான அகோரி சாமியார் ஒருவர், நான் கடவுள் பட பாணியில் அவரது உடல் மீது அமர்ந்தபடி சிவபூஜையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை: சூலூரில் இறந்தவர் உடல் மீது அமர்ந்து அகோரி சாமியார் ஒருவர் சிவ பூஜை நடத்தி இறுதிச்சடங்கு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குரும்ப பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

குடும்ப பிரச்சனையால் மனவேதனையில் இருந்த மணிகண்டன் நேற்றைய தினம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மணிகண்டனுடன் சிறுவயது முதலே நண்பராக பழகி வந்த திருச்சியை சேர்ந்த அகோரி சாமியார், அவரது மரண செய்தி கேட்டு சூலூர் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.



அப்போது காசியில் அகோரிகள் பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல மணிகண்டனின் உடல் மீது அமர்ந்த சாமியார், அகோரிகள் புடை சூழ சிவ வாத்தியங்களுடன் காலபைரவர் பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தார்.



இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மயானத்துக்கு வந்து அகோரி சாமியாரின் சிவ பூஜையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...