சென்னை சூப்பர் கிங்ஸ் தான் எனக்கு பிடித்த அணி - சத்குரு பேசும் வீடியோ மீண்டும் வைரல்!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் நிலையில், தனக்குப் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் ஃபீவர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈஷா யோகா மைய நிறுவன சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது விருப்பமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸை ஆதரிக்கும் பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது.

இந்தக் காணொளியில், மேற்கிந்திய கிரிக்கெட்டின் அடையாளமான ‘தி யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் சத்குருவிடம், “உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது?” என்று கேட்கிறார். சத்குரு தனக்கே உரித்தான வெடிச்சிரிப்புடன், “நிச்சயமாக சென்னை அணிதான்,” என்கிறார்.

KKR அணியினர் தனது ஆசிகள் வேண்டி தன்னை நாடிய ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றி சத்குரு சொல்லும்போது, “கடந்த முறை KKR அணி இறுதிப் போட்டியில் இருந்தபோது, அவர்கள் என்னை அழைத்து, சத்குரு, நீங்கள் எங்கள் அணியை ஆசீர்வதிக்க வேண்டும் என்றனர்.

அப்போது யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள், ‘சென்னை அணிக்கு எதிராக’ என்றார்கள். நான் சொன்னேன், ‘அப்படியென்றால், இது ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியாது,” என்றேன் என சத்குரு சொல்ல., கெய்லும் சத்குருவும் சிரிக்கின்றனர்.

வீடியோவின் இறுதிப் பகுதியில், ஐபிஎல்-லில் கண்டிப்பாக ‘சென்னை தான் நம்பர் ஒன் டீம்’ என்று கிறிஸ் கெய்ல் கருத்துத் தெரிவிக்கிறார், அதற்கு சத்குரு, ‘தோனி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய ஐபிஎல் சீசனில், சத்குரு RCB மற்றும் CSK அணிகளை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...