வெள்ளலூர் அருகே மதுபோதையில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலியான சோகம்!

வெள்ளலூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் குடிபோதையில் ஆலமரத்தின் மீது ஏறிய அவர், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை: கோவை வெள்ளலூர் அருகே மதுபோதையில் ஆலமரத்திலிருந்து கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் லியான சோகம்.

கோவை நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி என்பவரது மகன் ஜெயக்குமார் (45). பெயிண்டரான இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். ஜெயக்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகுணா ஜெயக்குமாரை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

அப்போது, மது போதையில் வந்த ஜெயக்குமார் அப்பகுதியில் இருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த ஜெயக்குமார் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...