கோவை அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் - பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!

ஆனைக்கட்டி மலைப்பகுதி 24.வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி பழங்குடியின கிராமத்தில் அரசு மற்றும் தனியார் உதவியுடன் பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. தங்களின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் பழங்குடியின மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி எனும் மலை கிராமத்தில் 1 குடும்பங்கள்  மட்டுமே உள்ளது. இந்த குக்கிராமத்தில், சாலை, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்த போதும், பல ஆண்டுகளாக வீடுகள் மோசமான நிலையில் இருந்து வருகிறது.  இதனால் அக்கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர், அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, அதிமுக ஆட்சியில் முதற்கட்டமாக 5 வீடுகள் கட்டப்பட்டன.

பின்னர் மற்ற பழங்குடி குடும்பங்களும் தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர உதவ வேண்டுமென ஜோஸ்வாவிடம் வலியுறுத்தப்பட்டது.



அதன் பேரில் 2வது கட்டமாக 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று தமிழ்நாடு அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ரூ.3 லட்ச வழங்கப்பட்டு அந்த நிதி போதுமாக இல்லாத நிலையில், புராபெல் மற்றும் ராக் என்ற நிறுவனத்தின் உதவியுடன் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவுற்றது.

இந்த திட்டத்தின் மூலம் முடிவுற்ற 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் புராபெல் வித்யா செந்தில்குமார் , ராக்  நிறுவன தலைவர் பாலசுந்தரம், மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இது குறித்து கண்டிவழி கிராம மக்கள் கூறியதாவது, பல ஆண்டுகள் நல்ல வீடுகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டு அரசு மற்றும் தனியார் உதவியுடன் வீடு கட்டி தந்துள்ளனர். 

தற்போது கட்டப்பட்டு உள்ள வீடு நன்றாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான ஜோஸ்வாவிற்கு நன்றி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...