கோவையில் வீடு புகுந்து 6.5 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை

கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்த போது வீட்டில் நுழைந்த மர்மநபர் 6.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.42 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.



கோவை: வேலாண்டிபாளையத்தில் வீட்டில் புகுந்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...