கோவை அருகே பெண்கள் நூதனப் போராட்டம் - வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர்பாளையம் கிராமத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் நேரில் வந்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாக பெண்கள் தெரிவித்ததால் பரபரப்பு நிலவிவருகிறது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வதம்பசேரி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வரை வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

குறிப்பாக மயானத்திற்காக 19 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் மயானத்திற்கு மூன்று ஏக்கர் போக மீதமுள்ள நிலத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மயானம் அருகில் உள்ள இடத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முதற்கட்டமாக அந்த நிலத்தை சுத்தம் செய்து வரும் பெண்கள் குடிசைகள் அமைப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.



இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.



ஆனால், வட்டாட்சியர் நேரில் வந்து, வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துவருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...