மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.



இந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில் வன சரகர்கள் தலைமையில் வனவர்கள் வனக்காப்பாளர் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட வன பணியாளர்கள் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணி மூன்று நாள் நடைபெறுகிறது. முதல் நாள் அட்டகட்டி பயிற்சி மையத்தில் வன பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின் இன்று மானாம்பள்ளி வனச்சரகத்தில் வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சிங்கோனா வனப்பகுதிக்குள் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.



முதல் நாள் யானைகள் மற்றும் அதன் நடமாட்டம் உள்ள இடங்கள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் யானைகளை நேரடியாக கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...