ஆனைக்கட்டி அருகே யானை தாக்கி வடமாநில ஆராய்ச்சி மாணவர் பலி

கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல்(23) படித்து வந்தார். இவர் நேற்று வளாகத்தில் நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: ஆனைக்கட்டி அருகே யானை தாக்கியதில் வட மாநிலத்தைச் சேர்ந்தஆராய்ச்சி மாணவர் உயிரிழந்தார்.

கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்று விக்கப்படுகிறது.இம்மையத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். அதே சமயம் இது யானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல்(23)என்பவர் நேற்றிரவு நிறுவன வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது.

இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் விஷாலை மீட்டு உடனடியாக கேரள மாநில எல்லைக்குட்பட்ட கோட்டைதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

விஷாலுக்கு மார்பெலும்பு முறிவு, வலது கால் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...