பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள 2 ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பாத்திரக் கடை ஒன்றின் பூடைத்து உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செந்தில்குமார் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவரது கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோல், அருகிலுள்ள சகாயராஜ் என்பவரது ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.4000 பணத்தையும் திருடி சென்ற மர்மநபர்கள், அடுத்த தெருவில் ஒரு பாத்திர கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுட்டுள்ளனர்.
இது குறித்து கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்த்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் தடயங்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.