ஊட்டியில் சாலை பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்!

ஊட்டி அடுத்த தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலைப் பணிகள் குறித்து அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். இதில் சாலையின் தரம், உறுதித் தன்மை, அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.


நீலகிரி: ஊட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கையில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.

இதன்படி, ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கோவை திட்டங்கள் உதவி கோட்டப் பொறியாளர் உமா சுந்தரி மற்றும் உதவிப் பொறியாளர்கள் விக்னேஷ்ராம், ஸ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. இதில் சாலையின் தரம், உறுதித் தன்மை, அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வில் ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் குழந்தை ராஜ், ஊட்டி உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், உதவிப் பொறியாளர் ஸ்டாலின் மற்றும் ஊட்டி தரக்கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...