வாரிசு அரசியலை மையமாகக் கொண்டதுதான் திராவிடமாடல் அரசு..! - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்

அமைச்சரவையில் திமுகவில் இருக்கும் தலைவரின் மகனுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலம் திராவிட மாடல் அரசு, வாரிசு அரசியலை மையப்படுத்திதான் என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:



24 மணி நேரமும் ஆரோ தண்ணீரை பெற்றுக் கொள்ளும் தானியங்கி எந்திரத்தை திறந்து வைத்துள்ளதாகவும் மேலும் இரண்டு இயந்திரங்களை திறந்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தின் அமைச்சரவையில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர், அவர் அரசியல் ரீதியாக அனுபவம் உள்ளவர் எனவும் சக உறுப்பினராக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

அதே வேளையில், மாநில முதல்வருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தேன். திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால் அந்த சமூக நிதி சம நீதியாக இருக்க வேண்டும் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவியோ, அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை. கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளனர்.

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்திதான் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு விஷயம். இவர்கள் பேசுவது எல்லாம் குடும்ப அரசியல் வாரிசு அரசியலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பட்டியல் இனத்தவருக்கு முக்கிய இலாக்காக்கள் கொடுக்கவில்லை. பாஜகவில் கடைநிலை ஊழியரும்கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வரமுடியும் என்கின்ற உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம்

கர்நாடகா தேர்தலை பொருத்தவரை நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. எனவே, இரண்டு நாட்களுக்கு கருத்துக்கணிப்பை வைத்து நேரத்தை போக்கிக் கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட அவர்களுக்கு உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது, தேவையான நீர் கிடைப்பது ஆகியவற்றையெல்லாம் உறுதி செய்கின்ற மத்திய அரசு, விவசாயிகள் எந்தவித இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வாயிலாக இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை கொண்டுவந்தது மோடி அரசுதான் கனிமவள கொள்ளை தினமும் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது. ஈராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனைதான் என்றார். முதலமைச்சர் சட்டசபையில் சட்டமூலங்கை பற்றி பேசுகிறார். ஆனால், செயலில் எதுவும் இல்லை.

ஆளுநரின் செயல்பாடு முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்தது. பாஜக மாநில தலைவர் மீது சட்டரீதியான நடவடிக்கை என்கிறார்கள். குடும்பமே சேர்ந்து நோட்டீஸ் அனுப்புகிறார்கள் என்று தெரிவித்த வானதி சீனிவாசன், திமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பிடிஆர் ஆடியோவின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசு இருக்கும்வரை இந்துமத நம்பிக்கையை கொச்சைப்படுத்த அனுமதிக்கிறார்கள். போலீஸ் பாதுகாப்புடன் கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ் செய்தனர். ஆனால் மறைமுகமாக தியேட்டர்காரர்கள் மிரட்டப்பட்டனர்.

இவ்வாறு எம்எல்ஏ வானதி சினிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...