பைனான்சியரிடம் ரூ.58 ஆயிரம் நூதன மோசடி - கோவையில் தந்தை, மகன் கைது

கோவையில் தங்க நகை எனக் கூறி தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகையைக் கொடுத்து பைனான்சியரிடம் 58 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், கோவைப்புதூரை சேர்ந்த பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு (வயது22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (வயது65) மற்றும் அவரது மகன் விவேக் (வயது35), ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளோம்.

அதனை மீட்க பணம் வேண்டும் என கேட்டனர். சம்பவத்தன்று வங்கிக்கு சென்ற விசு, அவர்களின் நகையை ரூ.68 ஆயிரம் கொடுத்து மீட்டு கொடுத்தார்.

பின்னர் தந்தை, மகன் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனை தொடர்ந்து, விசு அந்த நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார். அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரியவந்தது.

ஒரிஜினல் நகையை வாங்கிவிட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து தந்தையும், மகனும் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விசு, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...