பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவையில் 339 பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி - ஆசிரியர்கள் பெருமிதம்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 363 பள்ளிகளில் 339 பள்ளிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்துள்ளதாக, ஆசிரியர்கள் பெருமிதம்.


கோவை: கோவை மாவட்டத்தில் 339 பள்ளிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் சமீபத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 339 பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பின் முழுமையாக பள்ளிகளை இயக்கி நடத்தப்பட்ட முதல் தேர்வு என்பதால் பிளஸ்-2 தேர்வு முடிவில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில், ஆப்சென்ட் பட்டியல் நீண்டதோடு முக்கிய பாடங்களில், கடின வகை கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

அரசுப்பள்ளி மாணவர்களின் வருகை பதிவும் குறைந்ததால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என்ற கருத்தும் எழுந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு சாதகமாகவே இருந்ததோடு, தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியதில் 97.57 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றது. மாநில அளவில் 4-ம் ரேங்க் பட்டியலில் இருந்தாலும், 0.28 சதவீதத்தில் தான், முதலிடத்தை தவற விட்டது.

ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் இப்படியிருக்க, 90 சதவீதத்திற்கும் மேல், தேர்ச்சி அடைந்த பள்ளிகள் மட்டுமே 339 என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை வெறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

இதன்மூலம், மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்ததாக, ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி நடத்தப்பட்டது.

இதில் கேள்விகள் சிந்தித்து எழுதும் படியாக இருந்தது. பொது வினாத்தாள் முறையில் பதிலளிக்க, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது பொதுத் தேர்வு முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் வினாத்தாளை பிரிண்ட் அவுட் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்தால் இத்திட்டம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...