வால்பாறை ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வால்பாறை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஐயப்பசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

வால்பாறை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் ஐயப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்றைய தினம் கோலாகலமாக துவங்கியது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.



அதனை தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் பிரம்மகலசாபிஷேக கும்பாபிஷேகம் சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வந்த புனிதத்தீர்த்தங்களுடன் நடைபெற்றது.



வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவைத் தொடர்ந்து 41 நாள் மண்டலபூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகளும், திருவிழா கமிட்டிகளும் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...