கோவையில் வ.உ.சிதம்பரனார் முழு உருவச்சிலை திறப்பு - காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்!

கோவையில் வ.உ.சி மைதானத்தில் ரூ.40 லட்சம் செலவில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சியர் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு வ.உ.சிதம்பரனருக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியது. நடைபெற்றுவந்தது. இதற்கென செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோவை வ.உ.சி. மைதானத்தில் பீடம் அமைக்கப்பட்டு 7 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.



இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையொட்டி, இந்த சிலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.



இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



அப்போது, அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட வ.உ.சி.யின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...