தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு -  94.03 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வெழுதிய 8.03 லட்சம் பேரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வுகள் அனைத்தும் முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 79 மையங்களில் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து,மாணவ-மாணவியரின் மதிப்பெண்கள் பாடவாரியாகப் பதிவேற்றப்பட்டு, முடிவுகளை வெளியிடுவதற்குத் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.இதில், 8.03 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 7,55,451 லட்சம் மாணவ-மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதம் ஆகும். இவர்களில் மாணவியர் 4,05,753 (96.38%) பேரும், மாணவர்கள் 3,49,697 (91.45%) பேரும்மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர்.

இந்தாண்டும் வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், 97 சதவீதத் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...