ஊதிய விவகாரம் -  கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தமிழக அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.இதனை அடுத்து,கடந்த 3 மாதங்களுக்குமுன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போதுவரை வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தங்களுக்கு வழங்க வலியுறுத்தியும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் தங்களது கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...