கோவையில் இன்று முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படாது - மால் நிர்வாகங்கள் அறிவிப்பு!

கோவையில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று மால்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இன்று முதல் அப்படம் திரையிடப்படாது என மால் நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.



கோவை: கோவையில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட மூன்று மால்களில் உள்ள திரையரங்களில் நாளை முதல் அப்படம் திரையிடப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வலியுறுத்து இஸ்லாமிய அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் மால்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாதுகாப்பிற்காக அங்கு சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் கோவையில் உள்ள மூன்று மால்களில் உள்ள திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என திரையரங்கு நிர்வாகத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...