கோவை ஸ்ரீ அரங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா - கோவிந்தா, கோவிந்தா.. என பக்தர்கள் கோஷம்!

பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் தேர்திருவிழாவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோயிலின் மாடவீதிகளில் வலம் வந்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுந்தனர். கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பாலமலை ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோவில்.



இக்கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பெருமாள் 30ம் தேதி அன்னவாகனத்திலும், மே 1ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 2ம் தேதி கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

கடந்த 3ம் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 4ம்தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கியது.

இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 6 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோயிலின் மாடவீதிகளில் வலம் வந்தார்.



இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுந்தனர்.



அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோசங்களை எழுப்பினர்.

அதன்பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள்புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கு பெற்ற நாட்டியஞ்சலி, பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனைகளும் நடைபெற்றன.

கோவில் விழாவிற்காக கோவை மாவட்ட நிர்வாகம் கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளை செய்திருந்தது. காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கோவிலை நடந்து ஏறுபவர்களுக்காக ஆங்காங்கே இலவச நீர்மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...