கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை‌ மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில்‌ ரூ.2.15 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ சாலை பணிகள்‌ மற்றும்‌ கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ கிழக்கு மண்டலத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப், வார்டு எண்‌. 22 மற்றும்‌ 56க்கு உட்பட்ட பகுதிகளில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின்‌ (TURIP 2022- 2023) கீழ்‌ ஒண்டிப்புதார்‌, சக்தி நகர்‌ மற்றும்‌ குமுதம்‌ நகா்‌ பகுதிகளில்‌ ரூ.1.88 கோடி மதிப்பீட்டில்‌ 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும்‌ பணிகளை ஆய்வு செய்தார்.

இதேபோல், வார்டு எண்‌.56க்கு உட்பட்ட பகுதியில்‌ ரூ.29.10 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 200 மீட்டர் தொலைவிற்கு‌, TNHD காலனியில்‌ 106 மீட்டர் தொலைவிற்கும்‌ மற்றும்‌ TNHD காலனி 2வது வீதியில்‌ 166 மீட்டர் தொலைவிற்கும்‌, ஆகமொத்தம்‌ 272 மீட்டர்‌ தொலைவிற்கு ரூ.27 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலை அமைக்கும்‌ பணி,



வார்டு எண்‌.9க்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில்‌ ரூ.56 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக கட்டுமான‌ பணிகளை‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்தொடாந்து, வார்டு எண்‌.61க்கு உட்பட்ட சிங்காநல்லூர்‌ பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, உள்‌ மற்றும்‌ புற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும்‌ சிகிச்சை முறைகள்‌, அறுவை சிகிச்சை மையம்‌, மருந்து மாத்திரைகளின்‌ இருப்புகள்‌ மற்றும்‌ பதிவேடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நோயாளிகளிடம்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து கேட்டறிந்த பின்னர், அரசு மருத்துவமனைகளுக்கு வரும்‌ நோயாளிகளிடம்‌ கனிவாக பேசி தரமான சிகிச்சை அளித்திட வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



மேலும்‌, மருத்துவமனையில்‌ ரூ.68.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ மருத்துவமனை கட்டிடத்தை பார்வையிட்டு, பணியினை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



பின்னர், கோவை மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.68க்கு உட்பட்ட டாடாபாத்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவில்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்‌.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...