ஆலாந்துறை காமாட்சி அம்மன்கோயில் திருவிழா - வாண வேடிக்கைகளுடன் கோலாகலக் கொண்டாட்டம்!

கோவையில் ஆலாந்துறை காமாட்சி அம்மன் திருக்கோவில் 96ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பெண் பக்தர்கள் பறவை அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இங்கு 96 ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க மிகப் பிரம்மாண்டமாக 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் கொண்டாடினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய கோவில் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.



கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும், பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.



இதைத் தொடர்ந்து, நடைபெற்ற வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதைத் தொடந்து மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி எடுப்பும், இறுதி நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...