வால்பாறை அருகே திடீரென சுற்றுலா பயணிகளின் காரை தாக்கிய காட்டு யானை - அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள வனப்பகுதி சாலையை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்தை காட்டு யானை ஒன்று திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதிக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியிலிருந்து அணில் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேரும் வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். வால்பாறை சுற்றி பார்த்துவிட்டு இன்று மலுக்கப்பாறை அதிரப்பள்ளி வழியாக கொல்லம் சென்று கொண்டிருந்தனர்.



அப்பொழுது அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள், யானை கயா என்ற பகுதியில் யானைகள் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து மறுபக்கம் சென்றுள்ளது.



எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வந்த யானை காரின் முன்பகுதியை தாக்கி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.

இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அப்போது, அவர்களது காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒலி எழுப்பி யானையை விரட்டினர். இதனையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது.

நூலிழையில் யானையிடமிருந்து உயிர் தப்பிய 4 பேரும் கொல்லம் பகுதிக்கு சென்றனர். வனப்பகுதி சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தாமலும், வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும் கேரளா வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...