அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் - ஓம் நமசிவாய முழக்கத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்!

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் புகழ்பெற்ற அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துக் கொண்டு, ஓம் நமசிவாய.. தென்னாடுடைய சிவனே போற்றி.. எனும் முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும்.

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.

சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 25ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் காட்சியளிக்கும் வைபவம் நடந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 9:30க்கு கற்பக விருட்சம் திருக்கல்யாணம், யானை வாகன காட்சி ஆகியவை நடந்தன. யானை வாகனத்தில் சாமி எழுந்தருளினார்.



இதனைத் தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்பு, வருகின்ற நான்காம் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.



இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெறும்போது, தேர் வலம் வரும் வீதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்த்திருவிழாவினை முன்னிட்டு திருப்பூரில் இருந்து கோவை செல்லும் மற்றும் கோவையில் இருந்து திருப்பூர் வரும் சாலைகளில் காவல்துறையினர் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...