தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் மே தின ஊர்வலம்!

மே தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் திருப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

மே 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மே தின தொழிலாளர் பேரணி நடைபெற்றது.



இதில் பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மே தின முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.



பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தொழிலாளர்களுக்கு ஆறு மணி நேர வேலையாக சமமாக மாற்றக்கோரியும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான இ எஸ் ஐ, பி எப் பிடித்தம் செய்வதை உறுதி செய்துவிட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள தொழிலாளர்களை 14 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெளிமாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு வந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மே தின ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...